ஹைதராபாத்:தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச்செயலாளர் நர லோகேஷ் கடந்த மாதம் 27ஆம் தேதி, சித்தூர் மாவட்டம் குப்பம் பகுதியில், பாத யாத்திரையை தொடங்கினார். இதில் நடிகரும், தெலுங்கு தேசம் கட்சியின் நிர்வாகியுமான நந்தமுரி தாரக ரத்னாவும் (40) பங்கேற்றார். அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள நாராயண ஹிருதாயலயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று (பிப்.19) உயிர் பிரிந்தது. மறைந்த தாரக ரத்னாவுக்கு அலேக்யா என்ற மனைவியும், மகளும் உள்ளனர். மேலும் இவர், ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சரும், பிரபல நடிகருமான என்.டி.ராமாராவின் பேரன் ஆவார். "ஓகடோ நம்பர் குர்ராடு" (2002) படத்தின் மூலம் அறிமுகமான இவர், ஒருசில தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.