'அப்துல் கலாமுடன் நாற்பது ஆண்டுகள் - சொல்லப்படாத கதைகள்' என்ற புத்தகத்தை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்தின் முன்னாள் விஞ்ஞானி சிவதாணு பிள்ளை எழுதியுள்ளார். வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்ற இப்புத்தகத்தின் வெளியிட்டு விழாவில் கலந்து கொண்ட துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, பொருளாதார, சமூக ரீதியான சவால்களை எதிர்கொள்வதில் முன்னாள் குடியரசு தலைவர் கலாமை இளைஞர்கள் உத்வேகமாக கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "இந்திய மக்கள் தொகையில் பெரும்பாலோனார் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் பொருளாதார, சமூக ரீதியான சவால்களை எதிர்கொள்வதில் முன்னாள் குடியரசு தலைவர் கலாமை இளைஞர்கள் உத்வேகமாக கொள்ள வேண்டும். வித்தியாசமாக யோசித்து தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதற்கு தீர்வுகளை கண்டுபிடிக்க வேண்டும். கிராமங்கள் மற்றும் சிறிய டவுன்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்க தர வேண்டும்.