டெல்லி: பாஜக தேசியத் தலைவர் ஜெபி நட்டா வெள்ளிக்கிழமை (ஜூன் 18) பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் உரையாற்றினார். அப்போது, “நாட்டு மக்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்துவது உள்ளிட்ட திட்டங்களில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன. இந்த விவகாரத்தை மக்களிடம் தோலுரித்து காட்டுங்கள்” எனக் கட்சி எம்.பி.க்களிடம் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “கோவிட் பெருந்தொற்றை மத்திய அரசு சிறப்பாக எதிர்கொண்டுவருகிறது. ஆனால் எதிர்க்கட்சிகள் இதில் அரசியல் செய்கின்றன. மக்களை குழப்புகின்றன.
தடுப்பூசிக்கு எதிரான போரில் மிகப்பெரிய சதித்திட்டம் தீட்டப்படுகிறது. எதிர்க்கட்சிகளும் தடுப்பூசி குறித்து சந்தேகம் எழுப்புகின்றன. ஏன் பொதுமுடக்கம் கொண்டுவந்தீர்கள் என அரசியல் விளையாடுகின்றனர். நாட்டு மக்களுக்கு தடுப்பூசியை மத்திய அரசு கொண்டுவந்தபோது, தடுப்பூசியை நாங்களே வாங்கிக் கொள்கிறோம் என அரவிந்த் கெஜ்ரிவாலும், மம்தா பானர்ஜியும் கூறினார்கள்.