சண்டிகர்:ஹரியானாவின் அம்பாலா மாவட்டம் பலனா கிராமத்தில் நேற்று (ஆகஸ்ட் 25) ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தற்கொலை செய்துகொண்டாதாக அப்பகுதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து உடல்களை மீட்டு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மர்மமான முறையில் உயிரிழப்பு - ஹரியானா மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர்
ஹரியானா மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Mystery shrouds death of six members of a family in Haryana
இதுகுறித்து போலீசார் தரப்பில், "உயிரிழந்தது, பலனா கிராமத்தை சேர்ந்த சுக்விந்தர் சிங், அவரது மனைவி, 2 மகள்கள் மற்றும் அவரது தாய், தந்தை என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அனைவரது உடல்களும் தூக்கில் தொங்கியவாறு மீட்கப்பட்டது. சுக்விந்தர் சிங், தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தவர். இதுகுறித்து தீவிர விசாரணை நடந்துவருகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:முதலமைச்சர் யோகியின் சிறப்பு அதிகாரி விபத்தில் மரணம்