கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் மஜீத். இவர், டிசம்பர் 31ஆம் தேதி மன்னார்காட் பெரிந்தல்மண்ணா நெடுஞ்சாலையில் தனது 5 வயது குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது, தனது குழந்தையை இருசக்கர வாகனம் இயக்க அனுமதித்தார்.
5 வயது குழந்தையை இருசக்கர வாகனம் இயக்க அனுமதித்த தந்தையின் ஓட்டுநர் உரிமம் ரத்து! - குழந்தையை ஸ்கூட்டர் ஓட்ட விட்ட தந்தையின் ஓட்டுநர் உரிமம் ரத்து
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் தலக்காடு அருகே 5 வயது குழந்தையை இருசக்கர வாகனம் இயக்க அனுமதித்த தந்தையின் ஓட்டுநர் உரிமத்தை வட்டாரப் போக்குவரத்துத் துறை அதிரடியாக ரத்து செய்துள்ளது.
motorcycle
இதனை வீடியோ எடுத்த சிலர், அந்த வீடியோ காட்சிகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலானதையடுத்து, போக்குவரத்து காவல்துறை கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இதைக் கண்ட பெரிந்தால்மன்னா போக்குவரத்து காவல் ஆய்வாளர் நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி, குழந்தையை வாகனம் இயக்க வைத்ததற்காக அவரது உரிமம் ஒரு வருடத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.