பெங்களூரு:கர்நாடக மாநிலம் மங்களூரு அடுத்த தட்சிணா கன்னடம் பகுதியில் கடலோரம் வசிக்கும் இஸ்லாமிய மக்கள் சுமார் 30 ஆண்டுகளாக இந்துக் தெய்வங்களை வழிபட்டு வருகின்றனர். இதற்கு அவர்கள் கூறும் காரணம் சற்று வித்தியாசமாக இருக்கிறது, ”தட்சிணா கன்னடம் பகுதிக்கு கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்ரு காசிம் சாஹேப் என்ற இஸ்லாமியர் குடியேறினார். இவர் இங்கு வந்த பிறகு பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வந்துள்ளார்.
இதனால் மனஉளைச்சலுக்கு உள்ளான காசிம், அக்கம் பக்கத்தினரிடம் விசாரிக்கையில் அவர்கள் இப்பகுதியில் உள்ள கோரகஜ்ஜா எனும் இந்து தெய்வத்தை வழிபடுமாறு கூறியுள்ளனர். அப்படி இல்லையெனில் இந்த சிக்கல்களிலிருந்து விடுபட இப்பகுதியிலிருந்து வெளியேற வேண்டும் எனக் கூறியுள்ளனர். இதனால் அச்சமடைந்த காசிம், கோரகஜ்ஜா தெய்வத்தினை வணங்கத் தொடங்கினார்.