ஆந்திரபிரதேச மாநிலத்தில் உள்ள திருமலை திருப்பதி கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த அப்துல் கனி - நுபினா பானு என்ற இஸ்லாமிய தம்பதி, திருமலை திருப்பதி கோயிலுக்கு ரூ.1.02 கோடி நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
இதற்கான காசோலையை கோயில் வளாகத்தில் உள்ள ரங்கநாயகுல மண்டபத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் தர்மா ரெட்டியிடம் வழங்கினர்.
இதில் 15 லட்சம் ரூபாய் ஸ்ரீ வெங்கடேஸ்வரா அன்னதான அறக்கட்டளைக்கும், மீதமுள்ள 87 லட்சம் ரூபாய் ஸ்ரீ பத்மாவதி விருந்தினர் மாளிகைக்கு தேவையான புதிய பொருட்கள் வாங்குவதற்கும் கொடுத்துள்ளனர்.
முன்னதாக கடந்த 2020 ஆம் ஆண்டு கரோனா பெருந்தொற்று காலத்தில் கிருமிநாசினி மருந்து தெளிக்கும் டிராக்டர் மற்றும் காய்கறிகள் ஏற்றிச்செல்வதற்காக 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குளிர்சாதன பெட்டியை அவர்கள் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:இந்துக்களும் இஸ்லாமியர்களும் இணைந்து நடத்தும் கந்தூரி திருவிழா