பெங்களூரு:கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் செயல்பட்டுவரும் முருக மடத்தின் மடாதிபதியாக சிவமூா்த்தி முருகா சரணரு உள்ளார். இந்த மடம் சார்பில் தங்கும் விடுதியுடன் கூடிய பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர்.இந்த பள்ளிகள் ஒன்றில் படிக்கும் 2 மாணவிகள் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு மீது பாலியல் புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து மாணவிகள் மைசூருவில் உள்ள தனியார் அமைப்பிடம் தெரிவித்துள்ளனர். அந்த அமைப்பு, குழந்தைகள் பாதுகாப்பு மையத்தை தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளது. அதனடிப்படையில் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு உள்பட 5 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதோடு பாதிக்கப்பட்ட மாணவிகளில் ஒருவர் எஸ்.சி. என்பதால், மடாதிபதி மீது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதைத்தொர்ந்து மடாதிபதி கைது செய்யப்பட்டார்.