தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மகாராஷ்டிராவில் 6 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த தாய்! - மகாராஷ்டீராவில் 6 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த தாய்

மகாராஷ்டிரா மாநிலத்தில் பெண் ஒருவர் ஆறு குழந்தைகளை கிணற்றில் தள்ளி விட்டு தானும் குதித்து தற்கொலைக்கு முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டீராவில் 6 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த தாய்!
மகாராஷ்டீராவில் 6 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த தாய்!

By

Published : May 31, 2022, 7:30 AM IST

மகத்(மகாராஷ்டிரா): மகாராஷ்டிரா மாநிலம், மகத்தில் உள்ள டல்கத்தி கிராமத்தில் வசித்த பெண் ஒருவர், கணவரின் கொடுமை தாங்காமல் தன் 6 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் அவரது ஆறு குழந்தைகளும் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தாய் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

ஐந்து பெண் குழந்தை மற்றும் ஒரு ஆண் உட்பட ஆறு பேரும் தாயின் கண்முன்னே நீரில் மூழ்கி இறந்துள்ளனர். அவர்கள் ரோஷினி(10), ரேஷ்மா(10), வித்யா(5), ஷிவராஜ்(3) மற்றும் ராதா (1) ஆகியோர் இறந்துள்ளனர். ஆறு பேரையும் கிணற்றில் தள்ளிய பின் அந்த பெண்ணும் குதித்துள்ளார், அந்த நேரத்தில் அப்பக்கம் வந்த மலைவாசி ஒருவர் அவரை மட்டும் காப்பாற்றியுள்ளார். மீதமுள்ள குழந்தைகளை அவரால் காப்பாற்ற முடிய வில்லை.

மகத் தாலுகாவின் கார்வாலி பகுதியைச் சேர்ந்த இக்குடும்பத்தினர் வெளிநாட்டிலிருந்து வந்து தங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கணவன் குடித்து விட்டு அப்பெண்ணையும், குழந்தைகளையும் கொடுமைபடுத்துவதால் இம்முடிவை எடுத்ததாக அப்பெண் தெரிவித்தார். அத்தொகுதியின் எம்.எல்.ஏ பரத் கோக்வாலே கூறுகையில் கிணற்றில் இருந்து இதுவரை 4 குழந்தைகளின் உடல் மீட்கப்பட்டுள்ளதாகவும், அப்பெண் காவல்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் கூறினார்.

இதையும் படிங்க:Exclusive: பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா சுட்டுக்கொலை; பின்னணி என்ன?

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details