மகாராஷ்டிரா : பாகிஸ்தானை சேர்ந்த இருவர், ஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட டேங்கர் லாரியுடன் மும்பையில் இருந்து கோவா நோக்கி சென்று உள்ளதாக மும்பை காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு மர்ம நபர் மிரட்டல் விடுத்ததாக மும்பை போலீசார் தெரிவித்து உள்ளனர்.
நள்ளிரவு 1 மணிக்கு மும்பை காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்ம நபர், மும்பையில் இருந்து ஆர்.டி.எக்ஸ் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வெள்ளை நிற டேங்கர் லாரி பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த இரண்டு பேருடன் கோவா நோக்கி சென்று கொண்டு இருப்பதாக தகவல் தெரிவித்ததாக மும்பை போலீசார் கூறினர்.
இதையடுத்து மகாராஷ்டிர பயங்கரவாத தடுப்பு படை மற்றும் கோவா காவல் கட்டுபாட்டு அறைக்கு தகவல் கொடுத்ததாக மும்பை போலீசார் தெரிவித்து உள்ளனர். மேலும் மும்பை காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட நபர் தன்னை பாண்டே என அறிமுகப்படுத்திக் கொண்டதாகவும் மேற்கொண்டு ஏதும் கூறிவில்லை என்றும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.
காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட நபரின் இருப்பிடத்தை கண்டுபிடித்து உள்ளதாகவும் அதேநேரம் தொடர்பு கொண்ட பாண்டே என்பவர் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் மும்பை போலீசார் தெரிவித்து உள்ளனர். இது குறித்து தொடர்ந்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
முன்னதாக கடந்த ஜூலை 12ஆம் தேதி மும்பை காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்ம நபர் சீமா ஹைதரை மீண்டும் பாகிஸ்தான் நாட்டுக்கு திருப்பி அனுப்பாவிட்டால், 2008ஆம் ஆண்டு மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவம் போன்று மற்றொரு தீவிரவாத தாக்குதலுக்கு மும்பை போலீசார் தயாராக இருக்க வேண்டும் என மிரட்டல் விடுத்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த மிரட்டல் அழைப்பு குறித்து மும்பை போலீசார் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருவதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், மீண்டும் மும்பை காவல் கட்டுப்பாட்டு அறையை மர்ம நபர் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க :பணத் தகராறில் இளைஞரை அரை நிர்வாணமாக்கி தாக்குதல்.. இரண்டு ஆண்டுகளுக்கு பின் கிடைத்த நீதி!