தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் வெளிநாட்டு வேலை மோசடி - இருவர் கைது! - international job racket

தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் தொடர் சர்வதேச வேலை மோசடியில் ஈடுபட்ட இருவரை மும்பை போலீசார் கைது செய்தனர்.

வேலை மோசடி
வேலை மோசடி

By

Published : Feb 21, 2023, 11:31 AM IST

மும்பை:தமிழ்நாடு, மகாராஷ்டிரா, தெலங்கான உள்பட பல்வேறு மாநிலங்களில் சர்வதேச வேலை மோசடியில் ஈடுபட்ட இருவரை மும்பை போலீசார் கைது செய்தனர். மும்பை மட்டுங்கா பகுதியைச் சேர்ந்த அனில் ஷிர்சாகர் வெளிநாட்டு வேலை தேடி முயற்சித்து உள்ளார். இதற்காக பல்வேறு இணையதள வேலை முகப்புகளை தொடர்புகொண்டு வேலை தேடி உள்ளார்.

இந்நிலையில், இவரை மின்னஞ்சல் மூலம் தொடர்புகொண்ட கும்பல், துபாயில் உள்ள பெட்ரோபே என்ற சர்வதேச நிறுவனத்தில் பணி புரிய தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாகவும், விசா உள்ளிட்ட பயண செலவுகளை மேற்கொள்ள பணம் செலுத்துமாறு அந்த மின்னஞ்சலில் கூறப்பட்டு இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

அனில் ஷிர்சாக்ருக்கு போதிய நேரம் கொடுக்காத கும்பல் அடுத்தடுத்து பல்வேறு கட்டணங்களை கூறி 1 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் வரை கொள்ளையடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தான் ஏமாற்றப்படுவதை அறிந்த அனில், பணத்தை திருப்பித் தருமாறு கும்பலிடம் தெரிவித்துள்ளார்.

அனிலின் அழைப்புகளை ஏற்க மறுத்த கும்பல் அவரது, செல்போன் நம்பரை பிளாக் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காவல் நிலையத்தில் அனில் புகார் அளித்து இருந்தார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், வேலை மோசடியில் ஈடுபட்ட உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த விகாஷ் குமார் மற்றும் ரிஷப் துபே ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 64 சிம் கார்டுகள், 5 காசோலை புத்தகங்கள், 3 லேப்டாப்கள், 5 செல்போன்களை பறிமுதல் செய்ததாக போலீசார் கூறினர்.

மேலும் தமிழ்நாடும், மகாராஷ்டிரா, தெலங்கானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருவரும் வேலை மோசடியில் ஈடுபட்டதாகவும், இதுவரை எவ்வளவு ரூபாய் மோசடி செய்து உள்ளனர் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பெற விசாரணை நடத்தி வருவதாக போலீசார் கூறினர்.

இதையும் படிங்க:அரிதாக காணப்படும் இரு கருப்பை பிரச்சினை கொண்ட பெண்ணுக்கு பிறந்த இரட்டை குழந்தைகள்!

ABOUT THE AUTHOR

...view details