தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 13, 2020, 2:32 PM IST

ETV Bharat / bharat

டிஆர்பி முறைகேடு: ரிபப்ளிக் தொலைக்காட்சி சி.இ.ஓ. கைது!

மும்பை: டிஆர்பி வழக்கு தொடர்பாக ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை செயல் அலுவலர் விகாஷ் காஞ்சந்தனி கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பை காவல்துறை
மும்பை காவல்துறை

டிஆர்பி முறைகேடு ஊடகத்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. இந்நிலையில், இதுதொடர்பாக ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை செயல் அலுவலர் விகாஷ் காஞ்சந்தனியை மும்பை காவல் துறை கைது செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரிபப்ளிக் தொலைக்காட்சியின் உரிமையாளரான ஏஆர்ஜி அவுட்லையர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், டிஆர்பி முறைகேடு வழக்கு தொடர்பாக நிறுவனத்தின் ஊழியர்களை கைது செய்யக்கூடாது என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. ஆனால், அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி சந்திரசூட், "வழக்கு தொடர்பாக தங்களது ஊழியர்களை கைது செய்யக்கூடாது எனவும் அதனை சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனவும் ஏஆர்ஜி அவுட்லையர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது மிகவும் பேராசைமிக்கதாக உள்ளது. எனவே, இதனை திரும்பபெற்றுக் கொள்வது நல்லது" என்றார்.

மும்பை காவல் துறை பதிவுசெய்த 1,400 பக்க குற்றப்பத்திரிகையில் தொலைக்காட்சியின் விநியோக தலைவர் கன்ஷ்யம் சிங் பெயர் இடம்பெற்றது. அதுமட்டுமின்றி, குற்றஞ்சாட்டப்பட்ட இருவர் சாட்சியாளராக மாறிக்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

டிஆர்பியை அளவிடும் ஹன்சா ஆராய்ச்சி நிறுவனத்தின் அலுவலரான நிதின் தியோகர், இதில் முறைகேடு நடைபெறுவதாக புகார் அளித்ததைத் தொடர்ந்து, அக்டோபர் மாதம் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விளம்பர வருவாயை பெருக்கிக்கொள்ளும் நோக்கில் டிஆர்பியை அதிகரிப்பதில் ரிபப்ளிக் தொலைக்காட்சி முறைகேட்டில் ஈடுபட்டதாக மும்பை காவல் துறை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details