தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நட்சத்திர ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 2 இளைஞர்கள் கைது... - மும்பை ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

அந்தேரியில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இரண்டு இளைஞர்களை குஜராத்தில் போலீசார் கைது செய்தனர்.

Mumbai
Mumbai

By

Published : Aug 25, 2022, 8:46 PM IST

மும்பை:மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் அந்தேரி பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு மர்மநபர்கள் சிலர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். ஹோட்டலுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட அவர்கள், ஹோட்டலில் நான்கு இடத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், 5 கோடி ரூபாய் பணம் கொடுத்தால் வெடிகுண்டுகளை எடுப்போம் என்றும் மிரட்டியுள்ளனர்.

வெவ்வேறு தொலைபேசி எண்களில் இருந்து பல முறை அழைத்து மிரட்டல் விடுத்துள்ளனர். இதுதொடர்பாக ஹோட்டல் நிர்வாகம் போலீசில் புகார் அளித்தது. இதையடுத்து ஹோட்டல் முழுவதும் சோதனை நடத்தப்பட்டதில் வெடிகுண்டுகள் இல்லை என்பது தெரியவந்தது.

பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மிரட்டல் விடுத்த தொலைபேசி எண்களை கண்காணித்த போலீசார், விக்ரம் (27), யேஷு(19 ) ஆகிய இரண்டு இளைஞர்களை குஜராத்தில் கைது செய்தனர். இருவரும் பிகாரைச் சேர்ந்தவர்கள் என்றும், குஜராத் மாநிலம் வாபியில் பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது.

யேஷு சிம் கார்டு விற்பனையாளர் என்பதால், வெவ்வேறு எண்களில் இருந்து மிரட்டல் விடுத்ததாகவும், பணம் பறிப்பதற்காகவே இளைஞர்கள் இந்த வேலையை செய்துள்ளனர் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:பிராப்ளம் செய்த பிரபல யூட்யூபர் போலீஸுக்கு அஞ்சி தப்பியோட்டம்... தகவலளிப்பவருக்கு ரூ.25ஆயிரம் பரிசு

ABOUT THE AUTHOR

...view details