திருவனந்தபும்: கேரளாவின் திருச்சூரில் உள்ள குருவாயூர் கோயிலுக்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி நேற்று (செப் 17) சென்றார். அவரது இளைய மகன் ஆனந்த் அம்பானியின் வருங்கால மனைவி ராதிகா மெர்ச்சன்டுடன் சாமி தரிசனம் செய்தார். அதன்பின் கோயிலுக்கு காணிக்கையாக ரூ.1.5 கோடிக்காண காசோலையை வழங்கினார். இந்த காசோலையை குருவாயூர் தேவஸ்தான தலைவர் வி.கே. விஜயன் பெற்று கொண்டார்.
குருவாயூர் கோயிலுக்கு முகேஷ் அம்பானி ரூ.1.5 கோடி காணிக்கை - குருவாயூர் கோயிலில் அம்பானி
கேரள மாநிலம் குருவாயூர் கோயிலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி தரிசனம் செய்தார்.
அப்போது முகேஷ் அம்பானி, "ஒருவழியாக குருவாயூரப்பனுக்கு காணிக்கை செலுத்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நான் இங்கு இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அன்பான வரவேற்புக்கு மிக்க நன்றி" என்று தெரிவித்தார். முன்னதாக முகேஷ் அம்பானி ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார். அதன்பின் ரூ.1.5 கோடி காணிக்கைக்கான காசோலையை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ரூ.1.50 கோடி காணிக்கை; ஏழுமலையானை தரிசித்த அம்பானி தேவஸ்தானத்திற்கு வழங்கல்