சென்னை: சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று (ஜனவரி 07) மற்றும் நாளை ஆகிய இரு நாட்கள் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024-ஐ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ரூ.5.50 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்க்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த உலக முதலீட்டாளர் மாநாட்டில் 45 நாடுகளுக்கும் மேற்பட்ட பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். இதில் குவால்காம் நிறுவனத்தின் ரூ.177.27 கோடி மதிப்பிலான சிப் வடிவமைப்பு மையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பர்ஸ்ட் சோலார், எல்ஜிபிடிக்யூ மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீதம் வேலைவாய்ப்பு உறுதி அளித்துள்ள கோத்ரேஜ் நிறுவனத்தின் ரூ.515 கோடி முதலீட்டிலான கன்ஸ்யூமர் புராடக்ட் ஆகியவற்றிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மேலும், டாடா எலக்ட்ரானிக்ஸ் ரூ.12 ஆயிரம் கோடி முதலீடு, பெஹட்ரான் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் ரூ.1,000 கோடி முதலீடு, ஜேஎஸ்டபிள்யூ எனர்ஜி நிறுவனம் ரூ.12 ஆயிரம் கோடி முதலீடு, டிவிஎஸ் குரூப் கூடுதலாக ரூ.5 ஆயிரம் கோடி முதலீடு, மிட்சுபிசி எலக்ட்ரிக்ஸ் ரூ.500 கோடி முதலீடு, மர்ஸ்க், ஹூண்டாய் நிறுவனம் தமிழ்நாட்டில் மேலும் ரூ.6 ஆயிரம் கோடி முதலீடு என பல்வேறு நிறுவனங்கள் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
அந்த வகையில், ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி காணொளி மூலம் தெரிவிக்கும்போது, "தமிழ்நாடு உலக முதலீட்டாளர் மாநாட்டில், தவிர்க்க முடியாத சில காரணங்களால் கலந்து கொள்ள முடியவில்லை. அதற்கு முதலில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, இந்தியாவில் தொழில் நிறுவனங்களுக்கு மிக நெருக்கமான மாநிலமாக முன்னிலையில் உள்ளது. தமிழ்நாடு தொழில் மற்றும் கலாச்சாரத்தில் சிறந்த மாநிலமாக உள்ளது.