டெல்லி: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இயக்குனர் பதவியில் இருந்து முகேஷ் அம்பானி ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவராக முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானி நியமனம் செய்யப்பட்டுள்ளார். பங்கஜ் மோகன் பவார் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாண்மை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
முகேஷ் அம்பானி ராஜினாமா; ரிலையன்ஸ் ஜியோ தலைவராக ஆகாஷ் அம்பானி நியமனம்! - பங்கஜ் மோகன் பவார் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாண்மை இயக்குனராக நியமனம்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தலைவராக முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Mukesh Ambani
நேற்று(ஜூன் 27) நடைபெற்ற ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இயக்குநர்கள் கூட்டத்தில், முகேஷ் அம்பானி அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்ததாகவும், அக்கூட்டத்திலேயே ஆகாஷ் அம்பானி நிறுவனத் தலைவராக நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: ஹைதராபாத்தில் டி-ஹப் (T-Hub ) 2.0 திறக்கப்பட்டது