தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 1, 2023, 6:56 AM IST

ETV Bharat / bharat

CSK Vs GT: கூல் கேப்டனின் அதிரடி சாதனைகள்.. இவ்வளவா?

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியை தழுவினாலும், தனது அதிரடி ஆட்டத்திறனை வெளிப்படுத்தி சென்னை ரசிகர்களை குஷிப்படுத்திய கேப்டன் டோனி, ஆட்டத்தில் சிக்சர், பவுண்டரி அடித்து சாதனனைகள் சிலவற்றை தன் வசப்படுத்தி உள்ளார்.

Etv Bharat
Etv Bharat

அகமதாபாத் :16 வது ஐபிஎல் சீசன் நேற்று (மார்ச் 31) கோலாகலமாக தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டது. டாசை இழந்து முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் சேர்த்தது.

ருத்ரதாண்டவம் ஆடிய ருதுராஜ் கெய்க்வாட் 50 பந்துகளில் 4 பவுண்டரி 9 சிக்சர்கள் விளாசி 92 ரன்கள் விளாசினார். ருதுராஜின் அதிரடி ஆட்டத்தால் சென்னை அணி 150 ரன்களை எளிதில் கடந்தது. மறுபுறம் வீரர்கள் சொதப்பினாலும் களமிறங்கிய கேப்டன் டோனி 7 பந்துகளில் தலா 1 பவுண்டரி மற்றும் சிகசர் அடித்து 14 ரன்ள் சேர்த்தார்.

178 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் அணி, 19.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் குவித்து தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. விருத்தமான் சஹா 25 ரன், சுப்மான் கில் 63 ரன், சென்னையைச் சேர்ந்த சாய் சுதர்சன் 22 ரன் என அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.

தொடக்க ஆட்டத்தில் தோல்வியை கண்டாலும், ஓராண்டுக்கு பின் களத்தில் டோனியை கண்ட மகிழ்ச்சியில் சென்னை அணி ரசிகர்கள் திருப்தி அடைந்தனர். கடைசி ஓவரில் தலா ஒரு சிக்சர் மற்றும் பவுண்டரி அடித்த டோனி, சில சாதனைகளை தன் வசப்படுத்தி உள்ளார். ஐபிஎல் தொடரில் 20 வது ஓவரில் அதிகபட்ச சிக்சர் அடித்த வீரர் என்ற சிறப்பை டோனி பெற்று உள்ளார்.

20 வது ஓவர்களில் மட்டும் டோனி இதுவரை 53 சிக்சர்கள் விளாசி உள்ளார். அவரைத் தொடர்ந்து மும்பை அணியில் விளையாடிய கிரன் பொல்லார்ட் 33 சிக்சர்கள் அடித்து 2 வது இடத்தில் உள்ளார். இதில் கிரன் பொல்லார்ட் ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.

20 வது ஓவரில் டோனி அடித்த சிக்சர், சென்னை அணிக்கு அவர் அடித்த 200வது சிக்சராகும். இதன் மூலம் ஒரு அணிக்காக அதிக சிக்சர் அடித்த வீரர்களின் பட்டியலில் டோனி ஐந்தாவது இடத்தை பிடித்து உள்ளார். ஒரு அணிக்காக அதிக சிக்சர்கள் அடித்த வீரர்களில் கிறிஸ் கெயில் (பெங்களூரு) 239 சிக்சர்களுடன் முதல் இடத்திலும், அதே பெங்களூரு அணிக்காக ஏபி டிவில்லியர்ஸ் 238 சிக்சர்கள் அடித்து இரண்டாவது இடத்திலும், கிரன் பொல்லார்ட் மும்பை அணிக்காக 223 சிக்சர்கள் அடித்து 3வது இடத்திலும் உள்ளனர்.

பெங்களூரு அணிக்காக விராட் கோலி 218 சிக்சர்கள் அடித்து 4 வது இடத்தில் உள்ளார். தற்போது இந்த பட்டியலில் டோனி 5-வது இடத்தை பிடித்து உள்ளார். இதில் கூடுதல் குறிப்பிடத்தக்க விஷயமாக விரோட் கோலி மற்றும் டோனியை தவிர்த்து மற்ற 3 வீரர்கள் ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டது குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் இந்த ஆட்டத்தில் நூலிழையில் டோனி ஒரு சாதனையை கோட்டைவிட்டுள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கூடுதலாக 8 ரன்கள் மட்டும் டோனி எடுத்திருந்தால் ஐபிஎல் போட்டியில் 5 ஆயிரம் ரன்கள் கடந்த 7 வது வீரர் என்ற சாதனையையும் சேர்த்து தன் வசப்படுத்தி இருப்பார். இந்த மைல்கல்லில் விராட் கோலி 6ஆயிரத்து 624 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார்.

இதையும் படிங்க :CSK Vs GT: சென்னையை வீழ்த்திய குஜராத்.. ஆனாலும் சிஎஸ்கே பேன்ஸ் ஹேப்பி!

ABOUT THE AUTHOR

...view details