தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'நாடு முழுக்க, 'லவ் ஜிகாத்' சட்டத்தை அமல்படுத்த வேண்டும்'- பிரக்யா சிங் தாக்கூர் - லவ் ஜிகாத் சட்டம்

லவ் ஜிகாத்துக்கு எதிரான சட்டத்தை இயற்றி, அதனை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் எனப் பாஜக எம்.பி. சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் வலியுறுத்தியுள்ளார்.

Sadhvi Pragya Thakur
Sadhvi Pragya Thakur

By

Published : Jan 9, 2021, 1:28 PM IST

போபால்:கட்டாய மதமாற்றம், திருமணத்திற்காக மத மாறுவதை தடை செய்யும் வகையில் உத்தரப் பிரதேச அரசு லவ் ஜிகாத் சட்டம் இயற்றியுள்ளது.

இதனைத் தொடர்ந்து அதேபோன்ற சட்டத்தை மத்தியப் பிரதேசத்தில் இயற்ற அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், மேற்கு வங்கத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பாஜக மூத்தத் தலைவர் நரோட்டம் மிஷ்ரா, “மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றிப் பெற்றால், அம்மாநிலத்தில் லவ் ஜிகாத்துக்கு எதிரான சட்டம் கொண்டு வரப்படும்” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், பாஜக எம்.பி. சாத்வி பிரக்யா சிங் தாக்கூர், நாடு முழுவதும் லவ் ஜிகாத்துக்கு எதிரான சட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசிய அவர், "லவ் ஜிகாத் என்பது முந்தைய காலத்தில் கிடையாது. இதனை எதிர்க்கட்சிகள் தான் உருவாக்கியுள்ளனர். அன்பு தான் கடவுள். ஆனால் சில குற்றவாளிகள் அன்பிற்கு கலங்கம் ஏற்படுத்த நினைக்கிறார்கள். அவ்வாறு நினைப்பவர்களுக்கென சிறப்புச் சட்டம் இயற்றி, கடும் தண்டனை வழங்க வேண்டும்.

ஒருவரின் வாழ்க்கையை சிதைப்பது மிகப்பெரிய குற்றமாகும். எனவே இதுபோன்ற நபர்களை சுதந்திரமாக நடமாடவிடக்கூடாது" என்றார்.

இதையும் படிங்க:'லவ் ஜிகாத்திற்கு எதிராக அவசரச் சட்டத்தை ஜே.டி.யு. கொண்டுவர வேண்டும்' - பாஜக

ABOUT THE AUTHOR

...view details