இந்தியாவில் கோவிட்-19 காரணமாக மிகவும் அசாதாரண சூழல் நிலவிவருகிறது. நாட்டின் சுகாதாரத் துறை இதுவரை கண்டிராத நெருக்கடியைச் சந்தித்துவரும் இந்தத் தருணத்தில், நம்பிக்கையின் ஒளியாக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் திகழ்கிறார்.
மத்தியப் பிரதேச மாநிலம் பலாக்பேட் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் பிரக்யா கதே. இவர், அண்டை மாநிலமான மகாராஷ்டிராவின் நாக்பூருக்கு தனது இருசக்கர வாகனத்திலேயே பயணம்செய்து கோவிட்-19 பாதிப்புக்குள்ளான நோயாளிக்குச் சிகிச்சை அளித்துள்ளார்.
இரு மாநிலங்களில் பொதுமுடக்கம் அறிவிப்பு வெளியான நிலையில், தனது பணியை எக்காரணம் கொண்டும் நிறுத்திவிடக் கூடாது என்ற நோக்கில் 180 கி.மீ. தூரத்தை கொளுத்தும் வெயிலில் உணவு, நீர் ஏதும் எடுத்துக்கொள்ளாமல் ஏழு மணிநேரத்தில் சென்றடைந்துள்ளார் இந்தப் பெண் மருத்துவர்.
கொளுத்தும் வெயிலில் 180 கி.மீ. பயணம் இது குறித்து அவர், "எனது பெற்றோர் சிறிது தயக்கம் காட்டினாலும் நான் ஊக்கத்துடன் பணிக்கு வந்துள்ளேன். நாள்தோறும் 12 மணிநேரம் பிபிஇ உடைகளுடன் வேலைசெய்யும் சூழல் இருந்தாலும், எனது கடமையைச் செய்வதில் அமைதியும் மன நிறைவும் கிடைக்கிறது" என்றார் பிரக்யா.
இதையும் படிங்க:உயிரைப் பறிக்கும் கரோனா - ஒரே நாளில் 2,624 பேர் பலி!