தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியைத் தக்கவைத்தது பாஜக #MadhyaPradeshBypolls - The BJP retained power in Madhya Pradesh

போபால்: மத்தியப் பிரதேசத்தில் காலியாக இருந்த 28 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 19 இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது.

மத்திய பிரதேசத்தில் ஆட்சியைத் தக்கவைத்தது பாஜக #MadhyaPradeshBypolls
மத்திய பிரதேசத்தில் ஆட்சியைத் தக்கவைத்தது பாஜக #MadhyaPradeshBypolls

By

Published : Nov 10, 2020, 1:17 PM IST

Updated : Nov 10, 2020, 1:28 PM IST

மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்று முடிந்த 28 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பதிவாகியிருந்த வாக்குகளை எண்ணும் பணிகள் இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

தற்போதைய களநிலவரப்படி, வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில், பாஜக 19 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் காங்கிரஸ் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. அதேபோல் பகுஜன் சமாஜ் கட்சி தலா 1 தொகுதியிலும் முன்னிலை வகிக்கிறது.

குறிப்பாக, பாஜகவுக்கு மத்தியப் பிரதேசத்தில் 107 இடங்களும் காங்கிரஸ் கட்சிக்கு 87 இடங்களும் உள்ள நிலையில், பாஜக 8 தொகுதிகளை வென்றாலே, ஆட்சியில் நீடிக்கும் என்ற நிலையில், கிட்டத்தட்ட பாஜக 19 தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதால், ஆட்சியைத் தக்கவைப்பது உறுதியாகியுள்ளது.

மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 230 இடங்களில் ஒரு இடம் வெற்றிடமானதுபோக, மீதம் 229 தொகுதிகள் உள்ளன. அதில் தனிப்பெரும்பான்மைக்கு 115 தொகுதிகள் தேவை. இந்நிலையில் தற்போது கிடைக்கும் களநிலவரப்படி,19 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் இருப்பதால், தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிப்பது உறுதியாகியுள்ளது.

இதைத் தொடர்ந்து மத்தியப் பிரதேச மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் செளகான், போபாலில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் சக கட்சி நிர்வாகிகளுக்கு இனிப்புகளைப் பரிமாறி, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இதையும் படிங்க: ஜார்க்கண்ட் பழங்குடியினரின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றவுள்ள அரசு

Last Updated : Nov 10, 2020, 1:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details