தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பானி பூரி சாப்பிட்ட 97 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி - பானி பூரி சாப்பிட்ட குழந்தைகளுக்கு உடல் நலக்குறைவு

மத்திய பிரதேசத்தில் விழா ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பானி பூரி கடையில் பானி பூரி சாப்பிட்ட 97 குழந்தைகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பானி பூரி சாப்பிட்ட 97 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி
பானி பூரி சாப்பிட்ட 97 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

By

Published : May 29, 2022, 4:04 PM IST

மண்டலா (மத்திய பிரதேசம்): மத்திய பிரதேசம் மாநிலம் மண்டலா மாவட்டத்தில் சிங்கர்பூர் என்ற பகுதி உள்ளது. பழங்குடியினர் அதிகம் வாழும் இப்பகுதியில் நேற்று (மே 28) நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. இதில், சுற்றுவட்டார கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். உணவு கடைகள் உள்ளிட்டவை விழாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இந்த நிலையில், அங்கிருந்த பானி பூரி கடையில் பானி பூரி சாப்பிட்ட 97 குழந்தைகளுக்கு வயிற்று வலி, வாந்தி ஏற்பட்டு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து மருத்துவர் ஷக்யா கூறுகையில், "உடல் நலக்குறைவு (Food poison) ஏற்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டனர். அவர்கள் உயிருக்கு ஆபத்தில்லை" எனத் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக பானி பூரி கடை உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அந்தக் கடையில் பானி பூரி செய்யப் பயன்படுத்திய பொருள்கள், பானி பூரியை பறிமுதல் செய்து பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

இது குறித்து அறிந்த மத்திய அமைச்சரும், மண்டலா தொகுதி எம்பியுமான ஃபாகன் சிங் குலாஸ்தே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளை நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார்.

இதையும் படிங்க: சந்திரபாபு கட்சி மாநாட்டில் செம்ம விருந்து.. இன்னைக்கு ஒரு பிடி..

ABOUT THE AUTHOR

...view details