கட்னி:மத்தியப் பிரதேச மாநிலம் கட்னி மாவட்டத்தில் உள்ள மணப்புரம் கோல்டு லோன் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் கிளை அலுவலகத்தில் இன்று (நவம்பர் 26) துப்பாக்கியுடன் நுழைந்த கொள்ளையர்கள் ரூ.7 கோடி மதிப்புள்ள 15 கிலோ தங்கத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து கிளையின் விற்பனை மேலாளர் ராகுல் கோஸ்டா கூறுகையில், “காலை 10.30 மணியளவில், கைகளில் துப்பாக்கிகளுடன் நான்கு இளைஞர்கள் அலுவலகத்திற்குள் நுழைந்து, சுட்டுவிடுவோம் என்று மிரட்டி உதவிக் கிளை மேலாளரிடம் இருந்து சாவியைப் பறித்து 15 கிலோ தங்கம் மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கத்தை எடுத்துக்கொண்டு, தப்பிச் சென்றனர். அதன்பின் போலீசாருக்கு தகவல் கொடுத்தோம்" என தெரிவித்தார்.