பங்கா: பீகார் மாநிலம் பங்கா மாவட்டத்தில் வித்தியாசமான முறையில் விண்ணப்பம் எழுதி விடுப்பு (CL) கேட்கும் ஆசிரியர்களின் விண்ணப்பங்கள் சமூக வலைதளங்களில் வைராகி வருகிறது.
அரசு பள்ளி ஆசிரியர்கள் சாதாரண விடுப்புக்கான (CL) விண்ணப்பங்களை 3 நாட்களுக்கு முன்னதாகவே சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்டக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவிற்கு பள்ளி ஆசிரியர்கள் நூதன முறையில் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
அதன்படி பாங்கா மாவட்டத்தின் கச்சாரி பிப்ரா கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியரான அஜய் குமார் என்பவர் எழுதியுள்ள கடிதத்தில், ”சார், என் அம்மா டிசம்பர் 5 திங்கட்கிழமை இரவு 8 மணிக்கு இறந்துவிடுவார் என்பதால், அதனால் அவர்களின் இறுதிச் சடங்குகளுக்காக டிசம்பர் 6 மற்றும் டிசம்பர் 7 வரை என் பள்ளிக்கு வராமல் இருப்பேன். அதனால்தான் ஐயா, தயவு செய்து எனது விடுப்புக்கு ஒப்புதல் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.