தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மகன் தற்கொலை செய்தியை கேட்ட தாயும் விபத்தில் பலி! - மகன் தற்கொலை செய்தியை கேட்ட தாயும் விபத்தில் உயிரிழப்பு

கர்நாடக மாநிலத்தில் மகன் தற்கொலை செய்துகொண்ட நிலையில் தாயும் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Mother ends life after son commits suicide in Karnataka
Mother ends life after son commits suicide in Karnataka

By

Published : Aug 19, 2021, 11:08 AM IST

கர்நாடக மாநிலம், விஜயநகர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (20). பி.காம் படித்துவரும் இவரின் தாயார் லீலாவதி.

முன்னதாக மோகன் கல்லூரிக்கு தேர்வு எழுதச் சென்ற நிலையில் நண்பர்களின் இருச்சக்கர வாகனத்தை எடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், தனது வீட்டில் தன் நண்பர்களுடன் மோகன் தகராறிலும் ஈடுபட்டுள்ளார்.

இந்தப் பிரச்சினையில் மோகனின் தந்தை தலையிட்டிருக்கிறார். இதற்கிடையில் தனது அறைக்குச் சென்று கதவை சாத்திக்கொண்ட மோகன் வெகு நேரமாகியும் வெளியே வராததால் அப்பகுதியில் கரோனா பணியில் இருந்த காவல் துறையினர் இருவரை அழைத்து மோகனின் தந்தை கதவை உடைத்துப் பார்த்துள்ளார்.

அப்போது மோகன் தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது. இதில் அதிர்ச்சியடைந்த மோகனின் தந்தை, அவரது உடலை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.

இச்சூழலில், மகன் உயிரிழந்த செய்தியைக் கேட்டு தாய் லீலாவதி மருத்துவமனைக்குச் செல்ல சாலையை அழுதவாறு கடந்துள்ளார். ஆனால் எதிர்பாராதவிதமாக அங்கு வேகமாக வந்த கார் ஒன்று லீலாவதியின் மீது மோதியது.

இதனையடுத்து அவரையும் மோகன் அனுமதிக்கப்பட்ட அதே மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சைப் பலனின்றி லீலாவதியும் உயிரிழந்துள்ளார். மகன் இறந்து சில மணி நேரங்களிலேயே தாயும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:மரித்துப்போன மனிதம்: பழங்குடியின பெண் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய உறவினர்கள்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details