டெல்லி: இதுகுறித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வழங்கப்படும் சர்வதேச ஓட்டுநர் உரிமங்களின் வடிவம், அளவு, முறை, வண்ணம் ஆகியவற்றில் வேறுபாடுகள் இருந்துவருகிறது. அதன் காரணமாக, வெளிநாடுகளில் இந்த சர்வதேச ஓட்டுநர் உரிமத்தை பயன்படுத்தும் குடிமக்கள் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதுகுறித்து பல்வேறு புகார்களும் கோரிக்கைகளும் வந்துள்ளன.
நாடு முழுவதும் ஒரே மாதிரியான சர்வதேச ஓட்டுநர் உரிமம் - சர்வதேச ஓட்டுநர் உரிமம் புதிய வசதி
நாடு முழுவதும் சர்வதேச ஓட்டுனர் உரிமம் அளிப்பதில் குடிமக்களுக்கு சிறந்த வசதிகளை ஏற்படுத்துவதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இதன் காரணமாக, ஜெனிவா ஒப்பந்தத்தின்படி, நாடு முழுவதும் ஒரே மாதிரியான சர்வதேச ஓட்டுநர் உரிமம் அளிக்கப்பட உள்ளது. ஓட்டுநர் உரிமத்துடன், சர்வதேச ஓட்டுநர் உரிமத்தை இணைப்பதற்கு க்யுஆர் கோடு விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. உதவி எண்களும், மின்னஞ்சல் முகவரிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. முழுவிவரங்களுக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தின் இணையதள பக்கத்தை அனுகலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் அர்ச்சகர் நியமனங்களை எதிர்த்து வழக்கில் மாநில அரசுக்கு நோட்டீஸ்