விஜயநகரம் (கர்நாடகா):கர்நாடகா மாநிலம் ஹகரிபொம்மனஹள்ளி தாலுகாவிற்கு உட்பட்ட பன்னிக்கல்லு கிராமத்தைச் சேர்ந்த கரிபசப்பா, டி.கோட்ரேஷ், சி.வீரேஷா மற்றும் மஞ்சுநாத் கரிபசவ சஜ்ஜி ஆகியோருக்கு சொந்தமான ஆடுகளை, ஹம்பசாகரா கிராமம் அருகே மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்ட மாதுளை பயிரை ஆடுகள் தின்றுள்ளது.
பூச்சிக்கொல்லி தெளிக்கப்பட்ட உணவுகளை தின்ற நூற்றுக்கணக்கான ஆடுகள் பலி - உரிமையாளர்கள் கண்ணீர்! - pesticide sprayed food
பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட்ட உணவுகளை சாப்பிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்ததால், ஆடுகளின் உரிமையாளர்கள் மிகுந்த வருத்தத்துடன் உள்ளனர்.
பூச்சிக்கொல்லி தெளிக்கப்பட்ட உணவுகளை தின்ற நூற்றுக்கணக்கான ஆடுகள் பலி - உரிமையாளர்கள் கண்ணீர்!
உடனடியாக 100 க்கும் மேற்பட்ட ஆடுகள் நோய்வாய்ப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. மேலும் 30 ஆடுகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, கால்நடை மருத்துவர் சம்பவ இடத்துக்குச் சென்று சிகிச்சை அளித்துள்ளார். நூற்றுக்கணக்கான ஆடுகளை இழந்த, அதன் உரிமையாளர்கள் கண்ணீர் விட்டு அழுத சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:ரசாயனம் கலந்த மீனால் வாந்தி? - உணவு பாதுகாப்பு துறையில் புகார்