கட்சிரோலி : மகாராஷ்டிரா மாநிலத்தில் 26 நக்ஸல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடைபெற்ற மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தின் காட்டு பகுதிகள் சத்தீஸ்கர் மாநில எல்லையில் அமைந்துள்ளன.
மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி (Gadchiroli) மாவட்டம் தனோரா தாலுகா (Dhanora taluka) முரும்கான் (Murumgaon) மர்தின்டோலா (Mardintola forest)அடர்ந்த காடுகளில் நக்ஸலைட்டுகள் பதுங்கியிருப்பதாக காவலர்களுக்கு உளவுத் தகவல் கிடைத்தது.
காவலர்கள் தீவிர தேடுதல் வேட்டை இந்தத் தகவலின் பேரில் காவலர்கள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினார்கள். அப்போது காடுகளில் பதுங்கியிருந்த நக்ஸலைட்டுகள் காவலர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள்.
இதையடுத்து காவலர்கள் நடத்திய பதில் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தின் காட்டு பகுதிகள் சத்தீஸ்கர் மாநில எல்லையில் அமைந்துள்ளன. இந்தப் பகுதிகளில் நக்ஸலைட்டுகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இது மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையில் இருந்து 900 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
இதையும் படிங்க : தலைக்கு ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்ட நக்ஸல் சரண்!