தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

2 பள்ளி மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் ரூ. 960 கோடி டெபாசிட்!

பீகாரில் இரண்டு பள்ளி மாணவர்களின் வங்கிக்கணக்குகளில் ரூ. 960 கோடி டெபாசிட் செய்யப்பட்டிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2 பள்ளி மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் ரூ. 960 கோடி டெபாசிட்!
2 பள்ளி மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் ரூ. 960 கோடி டெபாசிட்!

By

Published : Sep 17, 2021, 6:34 AM IST

பீகார் மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு சீருடை உள்ளிட்டவைகள் வாங்க அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்படுகின்றன. இதற்காக பள்ளி மாணவர்கள் பெயரில் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு பணம் செலுத்தப்படுகின்றன.

இந்நிலையில், கதிகார் மாவட்டம் பாகோரா பாஸ்டியா கிராமத்தைச் சேர்ந்த குருசந்திர விஸ்வாஸ், அசிட் குமார் ஆகிய இரு மாணவர்கள், தங்களது உதவித்தொகை இருப்பை தெரிந்து கொள்ள அருகில் உள்ள கிராம வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு சென்றுள்ளனர்.

வங்கிக்கணக்குகளில் ரூ.960 கோடி டெபாசிட்

அப்போது, அசிட்குமாரின் வங்கிக்கணக்கில் ரூ. 900 கோடியும், குருசந்திர விஸ்வாஸ் வங்கிக்கணக்கில் ரூ. 60 கோடியும் செலுத்தப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. இதனைக்கண்டு அங்கிருந்த வாடிக்கையாளர் சேவை மையத்தினர், மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்டோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மாணவர்களின் வங்கிக் கணக்கானது வடக்கு பீகாரில் உள்ள பெலகஞ்ச் கிராம வங்கியில் அமைந்துள்ளது. பின்னர் இந்த விவகாரம் வங்கி மேலாளரின் கவனத்துக்கு செல்லவே, உடனடியாக அவர் இரு மாணவர்களின் வங்கிக்கணக்குகளையும் முடக்கி உயர் அலுவலர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் வங்கிக் கணக்கில் ரூ. 960 கோடி பணம் செலுத்தப்பட்ட விவகாரம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:ஆஸ்கர் பெர்னாண்டஸ் இறுதி சடங்கில் ராகுல் காந்தி பங்கேற்பு

ABOUT THE AUTHOR

...view details