"அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்" என்கிறது திருக்குறள்.
அன்பினை அடைத்து வைக்கத் தாழ் உண்டோ, அன்புக்குரியவரின் துன்பத்தை காணும்பொழுது வரும் கண்ணீரே ஒருவரின் அன்பினை வெளிகாட்டிவிடும் என்பதே இக்குறளுக்கு அர்த்தம்.

இதனை மையமாக வைத்து சமூக வலைதளங்களில் காணொலி ஒன்று வைரலாகிவருகிறது. அந்தக் காணொலியில் குரங்கு ஒரு படுத்த படுக்கையாய் கிடக்கும் மூதாட்டியைச் சந்தித்து, அவரைக் கட்டி அணைக்கிறது. அந்த மூதாட்டியும் குரங்கினை அணைத்து தடவி கொடுக்கிறார். காரணம் இந்த குரங்கிற்கு மூதாட்டி தினமும் உணவு கொடுத்திருக்கிறார்.
இதன்பிறகு மூதாட்டிக்கு உடல் நிலை சரியில்லாமல் போகவே அவர் படுத்த படுக்கையாகிவிட்டார். அவரைச் சந்திக்க வந்த குரங்கு மூதாட்டியைக் கட்டி அணைத்துவிட்டு செல்கிறது. இந்தக் காணொலி பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க:கொஞ்சி விளையாடும் குரங்குக் குட்டியின் சேட்டைகள்: காண்போரைக் கவரும் காட்சிகள்!