தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆட்டநாயகன் பரிசு தொகையை வாரிக் கொடுத்த முகமது சிராஜ்... எத்தனை லட்சம் தெரியுமா? - Asia Cup 2023 Final

Asia Cup 2023 Mohammed Siraj Donates Prize Money: ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை வென்ற இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், பரிசுத் தொகையை மைதான ஊழியர்களுக்கு வழங்கினார்.

ஆசியக் கோப்பை இறுதிபோட்டி 2023: ஆட்ட நாயகன் விருதை வென்ற சிராஜ் பரிசுத் தொகையை மைதான ஊழியர்களுக்கு வழங்கினார்
ஆசியக் கோப்பை இறுதிபோட்டி 2023: ஆட்ட நாயகன் விருதை வென்ற சிராஜ் பரிசுத் தொகையை மைதான ஊழியர்களுக்கு வழங்கினார்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 18, 2023, 11:39 AM IST

இலங்கை: இந்தியா, இலங்கை உள்ளிட்ட 6 அணிகள் கலந்து கொண்ட ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்றது. லீக் மற்றும் சூப்பர் 4 சுற்று ஆட்டங்கள் நிறைவு பெற்ற நிலையில் இறுதிப் போடிக்கு இந்தியா மற்றும் இலங்கை அணிகள் தகுதி பெற்றன.

ஆசியக் கோப்பை இறுதி போட்டி நேற்று (செப். 17) கொழும்பில் உள்ள ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

ஒரே ஓவரில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி முகமது சிராஜ் சீராஜ் அசத்தினார். 7 ஓவர்கல் வீசிய சிராஜ் அதில் 21 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளினார். ஆறு விக்கெட் வீழ்த்திய முகமது சீராஜுக்கு ஆட்ட நாயகன் விருது (man of the match) வழங்கப்பட்டது.

இதையும் படிங்க:TTF Vasan Accident : வீலிங் செய்யும் போது ஏற்பட்டதா விபரீதம்..? டிடிஎப் வாசனுக்கு என்னாச்சு?

ஆட்ட நாயகன் விருதுடன், 5 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 4.15 லட்சம் ரூபாய்) முகமது சிராஜுக்கு பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது. பரிசு தொகையை பிரேமதாச மைதான ஊழியர்களுக்கு முகமது சிராஜ் வழங்கினார். மேலும், ஆசிய கிரிக்கெட் வாரியம் மற்றும் இலங்கை கிரிக்கெட் வாரியம் ஆகியவையும் கண்டி மற்றும் கொழும்பு மைதான ஊழியர்களுக்கு 50 ஆயிரம் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் 41.59 லட்சம் ரூபாய்) பரிசுத் தொகையாக அறிவித்து உள்ளது.

இலங்கையில் நிலவிய மோசமான வானிலை மற்றும் சீதோஷ்ண மாற்றத்திற்கு மத்தியில் ஆடுகளைத்தை திறம்பட பராமரித்து ஆட்டத்திற்கு ஏதுவாக மாற்றிக் கொடுத்ததற்காக மைதான ஊழியர்களுக்கு பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், ஆட்ட நாயகன் முகமது சிராஜ் கூறுகையில், "நீண்ட காலமாக நன்றாகப் பந்து வீசுகிறேன்.

ஆனால், இன்று தான் அதற்கான பலன் கிடைத்தது. இன்று ஸ்விங் கிடைத்தது. ஸ்விங்கின் காரணமாக முழுமையாக பந்து வீசுவேன் என்று நினைத்தேன். வேகப்பந்து வீச்சாளர்களிடையே நல்ல பிணைப்பு இருக்கும் போது அது அணிக்கு உதவியாக இருக்கும் என நினைத்தேன். மைதான ஊழியர்களின் பங்களிப்பு இல்லாமல் போட்டி நன்றாக அமைந்து இருக்காது. எனவே இந்தத் தொகையை அவர்களுக்கு அர்ப்பணிக்கிறேன்" என்று கூறினார்.

இதையும் படிங்க:TTF Vasan accident: சாகசம் செய்ய முயன்றபோது விபத்தில் சிக்கிய டிடிஎஃப் வாசன்!

ABOUT THE AUTHOR

...view details