டெல்லி: இந்தியா முழுவதும் ஆகஸ்ட் 29ஆம் தேதி தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாள் இந்தியா நாட்டிற்கு பெருமை சேர்த்த ஹாக்கி வீரரான மேயர் தியான் சந்தின் பிறந்த நாளாகும். இதனையொட்டி பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தியான் சந்த் தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதோடு "தேசிய விளையாட்டு தின வாழ்த்துகள் மற்றும் மேஜர் தியான் சந்த் ஜியின் பிறந்தநாளில் அவருக்கு புகழாரம். கடந்த சில வருடங்களாக விளையாட்டுகள் சிறந்து விளங்குகின்றன. இந்தப் போக்கு தொடரட்டும். விளையாட்டு இந்தியா முழுவதும் பிரபலமடையட்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
யார் இந்த தியான் சந்த்..? இந்தியா ஹாக்கி அணி ஒலிம்பிக் விளையாட்டில் மூன்று முறை தங்கம் வென்ற போது அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர தியான் சந்த். இவர் இந்தியாவிற்காக விளையாடிய 185 போட்டிகளில் 570 கோல்கள் அடித்துள்ளார். உலகில் ஹாக்கியில் தலைசிறந்த வீரராக திகழ்ந்த மேஜர் தியான் சந்துக்கு மரியாதை செலுத்தும் விதமாகவே அவரது பிறந்த நாளில் தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்படுகிறது. தயான் கோல் அடிக்கும் யுக்தி மற்றும் பந்தை சிறந்த கட்டுபாட்டுக்குள் வைப்பது ஆகியவற்றிற்கு உலக ஹாக்கி அரங்கில் பெயர் பெற்றவராகும்.