வங்கக்கடலில் உருவாகியுள்ள ’நிவர்’ புயல் நாளை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் நாராயணசாமி இன்று, கடற்கரை சாலையில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ மாநிலத்தில் செய்யப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் எனவும் அவர் உறுதி அளித்துள்ளார்.
காரைக்காலை நெருங்கும் நிவர் - நாராயணசாமியுடன் மோடி ஆலோசனை! - நிவர் புயல்
புதுச்சேரி: புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் நாராயணசாமியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.
பாதுகாப்பற்ற மரங்கள், விளம்பரப் பதாகைகள் ஆகியவற்றை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. குடிதண்ணீர் பிரச்சனையை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மின்சாரம் தடைபட்டால் அதை 24 மணி நேரத்தில் சீர் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. காரைக்காலில் கடலுக்கு சென்ற மீனவர்கள் பலர் 12 படகுகளில் இன்று திரும்பியுள்ளனர். மற்றவர்கள் மாலைக்குள் கரை திரும்புவர். மருத்துவமனைகளில் போதிய மருந்துகளை இருப்பு வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது “ என்றார்.
இதையும் படிங்க: நிவர் புயல்: முதல்வர் பழனிசாமியுடன் பிரதமர் மோடி ஆலோசனை