டெல்லி: நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது. ஒருபக்கம் வேலை தேடுவோரின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துவருகிறது. மறுபக்கம் படித்தப்படிப்புக்கு மாறான துறைகளில் லட்சணக்கான இளைஞர்கள் வேலை செய்துவருகின்றனர்.
இதனால் மத்திய, மாநில அரசுகளும் அவ்வப்போது வேலை வாய்ப்புகளை உருவாக்கி, அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதனிடையே பாஜக அரசு வேலைவாய்ப்பின்மையில் கவனம் செலுத்தவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன.
இந்த நிலையில் பிரதமர் மோடி அதிரடியான உத்தரவை ஒன்றை பிறப்பித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் அலுவலக ட்விட்டர் பக்கத்தில், "மத்திய அரசின் அனைத்து துறைகள், அமைச்சகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பல்வேறு துறைகளில் காலிப்பணியிடங்கள் உள்ளதாக உயர் அலுவர்கள் தெரிவித்தனர். இந்த காலிப்பணியிடங்களை அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் நிரப்ப மோடி உத்தரவிட்டார். அதன்படி 10 லட்சம் பேருக்கு வழங்கப்பட உள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:இரண்டாவது நாளாக விசாரணைக்கு ஆஜரான ராகுல் காந்தி