டெல்லி: உயர் கல்வியில் பட்டியலின மாணவர்களுக்கான உதவித்தொகை திட்டத்தில் தன் பங்கினை 60 விழுக்காடாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் நான்கு கோடி பட்டியலின மாணவர்கள் பயனடைவார்கள் என மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான தாவர்சந்த் கெலாட் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், "பட்டியலின மாணவர்களுக்கான உதவித் தொகையில் மத்திய அரசு அதன் பங்கினை 60 விழுக்காடு அதாவது 59 ஆயிரத்து 48 கோடியாக உயர்த்த முடிவு செய்துள்ளது. மேலும் வரும் காலத்தில் இது 80 விழுக்காடாக உயர்த்தப்படும் எனவும் உறுதியளித்துள்ளது. இதன் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 4 கோடி மாணவர்கள் பயனடைவார்கள்
கடந்த இரண்டு ஆண்டுகளில், ஆண்டொன்றுக்கு ஆயிரத்து 100 கோடி ரூபாயை மத்திய அரசு செலவு செய்துள்ளது. ஆனால் அதனை மோடி தலைமையிலான அரசு மாற்றியமைத்துள்ளது. சில மாநிலங்களில் உதவித்தொகைகள் மாணவர்களுக்கு சென்றடையாமல் வேறு சில காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. இதனால் பட்டியலின மாணவர்கள் இடைநிற்றல் அதிகரித்துள்ளது.