காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டம் தலைவர் சோனியா காந்தி தலைமையில் இன்று நடைபெற்றது. நாடாளுமன்ற மத்திய வளாகத்தில் இந்த கூட்டம் நடைபெற்றது.
வேளாண் சட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த 700 விவசாயிகளின் தியாகத்தை நாம் போற்றுவோம். விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்டோரை மோடி அரசு கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கிறது.
அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு சாமானியர்களின் பட்ஜெட்டில் சுமையை கூட்டுகிறது. இதை அரசு தடுக்க தவறிவிட்டது. அதேபோல் நாட்டின் எல்லை விவகாரம் குறித்தும் அரசு நாடாளுமன்றத்தில் முழு விவாதம் தேவை என்றார்.
மாநிலங்களவையில் 12 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரம் குறித்து பேசிய சோனியா காந்தி, இந்த இடைநீக்க முடிவை ஏற்றுக்கொள்வே முடியாது. இடை நீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்களுக்கு ஆதாரவாக காட்சி உறுதியுடன் துணை நிற்கும் என்றார்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில், இதில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் என சோனியா ஆலோசனைகள் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் ராகுல் காந்தியும் பங்கேற்றார்.
இதையும் படிங்க:RIP BipinRawat: முப்படைகளின் முதல் தளபதி பிபின் ராவத் உயிரிழப்பு