தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிரதமர் மோடி 71 - மெகா திட்டங்களுடன் பிறந்தநாளை கொண்டாடும் பாஜக - Narendra Modi birthday

பிரதமர் மோடியின் 71ஆவது பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடா பாஜக பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை இன்று மேற்கொள்கிறது.

Modi 71
Modi 71

By

Published : Sep 17, 2021, 7:13 AM IST

பிரதமர் நரேந்திர மோடியின் 71ஆவது பிறந்தநாள் இன்று. மோடியின் பிறந்தநாளை நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாட பாஜகவின் திட்டமிட்டுள்ளனர்.

மோடி பிரதமராகப் பொறுப்பேற்றபின் அவரது பிறந்தநாளை அக்கட்சியினர் 'சேவை தினம்' எனக் கொண்டாடிவருகின்றனர். கடந்த முறை கோவிட்-19 பரவல் காரணமாக பிறந்தநாள் கொண்டாட்டம் தவிர்க்கப்பட்ட நிலையில் இந்தாண்டு செப்டெம்பர் 17 தொடங்கி அக்டோபர் 7 வரை கொண்டாட பாஜக திட்டமிட்டுள்ளது.

மோடி பிறந்தநாள் திட்டங்கள்

  • மோடியின் பிறந்தநாளான இன்று கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தை இதுவரை இல்லாத வகையில் அதிகளவிற்கு மேற்கொண்டு சாதனை படைக்க சுகாதாரத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது
  • மோடியின் சொந்த தொகுதியான பாஜகவில் 71,000 விளக்குகளை ஏற்றிவைத்து 14 கோடி ரேஷன் பைகளை வழங்க உத்தரப் பிரதேச பாஜக திட்டமிட்டுள்ளது
  • மோடி பரிசாகப் பெற்ற ஆயிரத்து 300க்கும் மேற்பட்ட பொருள்களை ஏலமிட்டு அதன் மூலம் கிடைக்கும் பணத்தை கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்குப் பயன்படுத்த கலாசார அமைச்சகம் திட்டமிட்டுள்ளது
  • பிகார் மாநிலத்தில் 30 லட்சம் தடுப்பூசி என்ற இலக்குடன் சிறப்பு முகாமை நடத்த மாநில முதலமைச்சர் நிதீஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்

இதையும் படிங்க:காங்கிரசில் இணைகிறாரா கன்னையா குமார்?

ABOUT THE AUTHOR

...view details