தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லியில் கட்டப்பட்டு வரும் திமுக அலுவலகத்தில் மு.க. ஸ்டாலின் ஆய்வு - மோடி ஸ்டாலின் சந்திப்பு

டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு கட்டப்பட்டு வரும் திமுக அலுவலுகத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

டெல்லியில் கட்டப்பட்டு வரும் திமுக அலுவலுகத்தில் மு.க. ஸ்டாலின் ஆய்வு
டெல்லியில் கட்டப்பட்டு வரும் திமுக அலுவலுகத்தில் மு.க. ஸ்டாலின் ஆய்வு

By

Published : Jun 17, 2021, 2:32 PM IST

டெல்லி லோக் கல்யாண் மார்க் பகுதியில் உள்ள பிரதமர் இல்லத்தில் பிரதமர் மோடியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றிரவு (10.30) சந்தித்து பேசுகிறார். தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் முதல் முறையாக டெல்லி பயணம் மேற்கொண்டு பிரதமரை சந்திக்கிறார்.

அதற்காக இன்று காலை காலை 7மணி அளவில் சென்னை ஆழ்வார் பேட்டை இல்லத்தில் இருந்து காரில் விமான நிலையம் சென்றார். தொடர்ந்து தனி விமானம் மூலம் முதலமைச்சர் டெல்லி சென்றடைந்தார்.

மு.க. ஸ்டாலின்

அவரை அமைச்சர் துரைமுருகன், திமுக நாடாளுமன்றக்குழு தலைவர் டி.ஆர்.பாலு, கனிமொழி எம்.பி, டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் ஆகியோர் வரவேற்றனர்.

டெல்லியில் மு.க. ஸ்டாலின் ஆய்வு

இதையடுத்து டெல்லி தீன்தாயாள் உபாத்தியா மார்க்கில் கட்டப்பட்டு வரும் திமுக அலுவலகத்தை முதலமைச்சர் நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். கட்டுமானப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால் அடுத்த மாதம் திறப்பு விழா நடத்த ஆலோசிக்கப்பட்டு உள்ளது.

இன்று மாலை பிரதமரை சந்திக்கும் ஸ்டாலின் செங்கல்பட்டு தடுப்பூசி மையத்திற்கு அனுமதி அளிப்பது, கரோனா சிறப்பு நிவாரண நிதிப் பங்கீடு, தடுப்பூசியை அதிகளவில் ஒதுக்குவது, நீட் தேர்வு உள்ளிட்ட வி‌ஷயங்கள் குறித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க:'ரூ. 61 கோடியில் குறுவை சாகுபடி திட்டம்' - முதலமைச்சர் அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details