தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மிசோரம் சட்டமன்ற தேர்தல்: 77.32% வாக்குப்பதிவு! - Mizoram Assembly Election 2023

Mizoram Assembly Election : மிசோரம் சட்டமன்ற தேர்தலில் 77.32% வாக்குகள் பதிவாகி சாதனை படைத்து உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Mizoram
Mizoram

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 7, 2023, 6:15 PM IST

Updated : Nov 7, 2023, 10:31 PM IST

ஐஸ்வால் :40 தொகுதிகளை கொண்ட மிசோரம் சட்டமன்றத்திற்கு இன்று (நவ.7) ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை செலுத்தி வந்தனர். ஏறத்தாழ 8 லட்சத்து 57 ஆயிரம் வாக்காளர்களை கொண்ட மிசோரம் மாநிலத்தில், 4 லட்சத்து 39 ஆயிரம் பேர் பெண் வாக்காளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

40 தொகுதிகளில் ஒட்டுமொத்தமாக 174 வாக்காளர்கள் போட்டியிடுகின்றனர். காலை 9 மணி நிலவரப்படி 12 புள்ளி 80 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. அதைத்தொடர்ந்து மதியம் 1 மணி நிலவரப்படி 52 புள்ளி 73 சதவீதமும், மாலை 3 மணி நிலவரப்படி 69 புள்ளி 87 சதவீதமும் வாக்குகள் பதிவானதாக இந்திய தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்தது.

இந்நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி மிசோரம் மாநிலத்தில் 77 புள்ளி 32 சதவீத வாக்குகள் பதிவாகி சாதனை படைத்து உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. அதிகபட்சமாக துய்க்கும் தொகுதியில் 87 புள்ளி 32 சதவீத வாக்குகளும், ஐஸ்வால் கிழக்கு தொகுதியில் 65 புள்ளி 97 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டு உள்ளது.

இதையும் படிங்க :சத்தீஸ்கர் சட்டமன்ற தேர்தல் : 5 மணி நிலவரப்படி 70.87% வாக்குப்பதிவு!

Last Updated : Nov 7, 2023, 10:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details