ஐஸ்வால் :மத்திய பிரதேசம், ராஜ்ஸ்தான், மிசோரம், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் கடந்த நவம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில், நேற்று (டிச. 3) தெலங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
ஆனால் மிசோரம் மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை மட்டும் இன்று நடைபெறுகிறது. 40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 4ஆம் தேதி நடைபெறும் என அண்மையில் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. மிசோரமில் உள்ள 40 சட்டசபை தொகுதிகளுக்கும் நவம்பர் 7-ந் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது.
அனைத்து வாக்குகளும் டிசம்பர் 3ஆம் தேதிதான் எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், டிசம்பர் 4ஆம்தேதிக்கு மாற்றப்பட்டது. பல்வேறு தரப்பில் இருந்தும் விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து டிசம்பர் 5ஆம் தேதிக்கு வாக்கு எண்ணிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் மாற்றியதாக கூறப்படுகிறது.
மிசோரம் மாநிலத்தில் ஆளும் மிசோ தேசிய முன்னணி ஆட்சியை இழக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகின. எதிர்கட்சியான ஜோரம் மக்கள் இயக்கம் அதிகமான இடங்களை பெறும் காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்க சாத்தியம் நிலவுவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க :"மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம் - சித்தாந்தத்திற்கான போர் தொடரும்" - ராகுல் காந்தி!