தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாலியல் வன்கொடுமையில் இருந்து தப்ப 4-வது மாடியில் இருந்து குதித்த மாணவி! - போக்சோ

டேட்டிங் ஆப் மூலம் பழக்கமான இளைஞரைப் பார்க்க சென்றபோது மாணவியை சிலர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நிலையில், 4-வது மாடியில் இருந்து மாணவி கீழே குதித்த சம்பம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

போக்சோ
போக்சோ

By

Published : Dec 23, 2022, 10:49 PM IST

டெல்லி:தலைநகர் டெல்லியின் முகர்ஜி நாகர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவிக்கு, டேட்டிங் ஆப் மூலம் வேறொரு பகுதியைச் சேர்ந்த இளைஞர் அறிமுகமாகி உள்ளார்.

பழக்கம் நாளடைவில் நெருக்கமான நிலையில் தனது வீட்டிற்கு வருமாறும் கல்லூரி மாணவிக்கு இளைஞர் அழைப்பு விடுத்துள்ளார். இளைஞரின் அழைப்பை ஏற்று, அவரது வீட்டிற்குச் சென்ற கல்லூரி மாணவிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

மாணவிக்கு பழக்கமான இளைஞர், தன் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திக் கொண்டு இருந்ததாகவும், மாணவியிடம் தகாத முறையில் நடக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. அந்த இடத்தை விட்டு வெளியேற முயன்ற மாணவியை இளைஞர்களின் நண்பர்கள் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக கூறப்படும் நிலையில், தனது கற்பை காப்பாற்ற 4-வது மாடியில் இருந்து மாணவி கீழே குதித்ததாக சொல்லப்படுகிறது.

ரத்த வெள்ளத்தில் மிதந்த மாணவியை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் தப்பியோட முயன்ற இளைஞர்களைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் மாணவி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், கொலை வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:பியர் கிரில்ஸுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் சம்மன்

ABOUT THE AUTHOR

...view details