தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

’புதுச்சேரி விமான நிலையத்தை விரிவுபடுத்த முடிவு’ - அமைச்சர் லட்சுமி நாராயணன் - etv bharat

புதுச்சேரி விமான நிலையத்தை விரிவுப்படுத்துவது தொடர்பாக முதலமைச்சரை விரைவில் சந்திக்கவுள்ளதாக அம்மாநில சுற்றுலா மற்றும் விமானத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் தெரிவித்துள்ளார்.

விமான நிலையத்தை விரிவுப்படுத்த முடிவு
விமான நிலையத்தை விரிவுப்படுத்த முடிவு

By

Published : Jul 28, 2021, 5:00 PM IST

புதுச்சேரி: லாஸ்பேட்டை பகுதியில் உள்நாட்டு விமான நிலையம் இருக்கின்றது. இங்கிருந்து தினசரி பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன.

பின்னர் கரோனா பரவல் காரணமாக இந்த சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரி விமான நிலையத்தை அம்மாநில சுற்றுலா மற்றும் விமானத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் இன்று (ஜூலை.28) ஆய்வு செய்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, "புதுச்சேரி விமான நிலையத்தை விரிவுப்படுத்த 215 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. முதற்கட்டமாக 104 ஏக்கரில் விமான நிலையத்தை விரிவுப்படுத்த முதலமைச்சரை விரைவில் சந்திக்கவுள்ளோம்.

விமான நிலையத்தை விரிவுப்படுத்த முடிவு

விமானங்கள் தரையிறங்க வசதியாக திண்டிவனம் சாலையை ஒட்டியுள்ள மரங்கள், உயரமாக உள்ள விளம்பரப் பலகைகளை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி மத்திய அரசிடமிருந்து இரவு, பகல் என அனைத்து சமயங்களிலும் விமானங்கள் வந்து செல்லக் கூடிய அளவில் தற்காலிக உரிமம் பெற நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

1,500 மீட்டர் நீலம் கொண்ட ஓடுதளம் 3,300 மீட்டர் வரை விரிவாக்கம் செய்யப்படுகிறது. நான்கு விமான நிறுவனங்கள் புதுச்சேரியில் இருந்து சேலம், கொச்சின், பெங்களுர், ஹைதராபாத் ஆகிய நான்கு நகரங்களுக்கு இயக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்" என்றார்.

இதையும் படிங்க:வங்கிகளுக்கு ஒன்பது நாள்கள் விடுமுறை

ABOUT THE AUTHOR

...view details