புல்வாமா:ஜம்மு - காஷ்மீர் க்ரூ பாம்போர் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த, வீரர்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். அதற்கு பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். இந்த மோதலில், பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
முன்னதாக, நேற்று (ஆகஸ்ட் 19) மாலை, ஸ்ரீநகரில் உள்ள சிஆர்பிஎஃப் சோதனைச் சாவடி மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதனால், இரண்டு வீரர்கள் படுகாயமடைந்தனர்.