தமிழ்நாடு

tamil nadu

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் - இரு காவலர்கள் மரணம்

By

Published : Dec 13, 2021, 7:38 PM IST

Updated : Dec 13, 2021, 10:38 PM IST

காவல்துறை வாகனத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு காவலர்கள் உயிரிழந்துள்ளனர்.

Militant attack at Zewan
Militant attack at Zewan

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே உள்ள ஜிவான் பகுதியில் இந்திய ரிசர்வ் காவல் படையினர் 14 பேர் பயணம் செய்த வாகனம் மீது பயங்கரவாதிகள் கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் இரண்டு காவலர்கள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. மீதமுள்ள 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

சிகிச்சை பெறுபவர்களில் நான்கு பேர் கவலைக்கிடமாக உள்ளதாக ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் உயர் அலுவலர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் நடைபெற்ற பந்தா சௌக் என்ற இடத்திற்கு விரைந்த ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் பயங்கரவாதிகள் தேடும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். அப்பகுதி முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து ஆளுநரிடம் விவரங்களை கேட்டறிந்த பிரதமர் நரேந்திர மோடி மறைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். சம்பத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, குற்றச்செயலில் ஈடுபட்டவர்களை தண்டனையிலிருந்து தப்ப முடியாது என உறுதியளித்துள்ளார்.

இதையும் படிங்க:ஜம்மு காஷ்மீரில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Last Updated : Dec 13, 2021, 10:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details