தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Mild tremors in Visakhapatnam: ஆந்திராவில் நிலநடுக்கம்; வீட்டை விட்டு வெளியேறிய மக்கள்! - விசாகப்பட்டினம்

ஆந்திராவின் ஒருசில பகுதிகளில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. மக்கள் வீட்டை விட்டு பதறிக் கொண்டே வெளியேறினர்.

tremors
tremors

By

Published : Nov 14, 2021, 3:12 PM IST

விசாகப்பட்டினம் : ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் வீடுகளிலிருந்து பயந்து வெளியேறினர்.

இந்த நிலநடுக்கமானது, சாகர் நகர், எம்விபி காலனி, பெதா வால்டயர், ஒன் டவுண், அக்கயாபலம், கஞ்சரபாலம், என்ஏடி, கசூவாகா மற்றும் வெப்சின்டா உள்ளிட்ட இடங்களில் உணரப்பட்டது.

இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுக்கோலில் 1.8 ஆக பதிவாகியிருந்ததாக தேசிய நிலநடுக்கவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க : பயங்கர நிலநடுக்கம்: 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

ABOUT THE AUTHOR

...view details