தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தை சாதகமாக பயன்படுத்தி கொலை நாடகம் - ஒடிசா இளைஞர் சிக்கியதன் பின்னணி?

கடன் தொல்லை மற்றும் மனைவியிடம் இருந்த தப்ப தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கிளம்பிய வதந்தியை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட இளைஞர் அந்த சம்பவத்தாலேயே போலீசாரிடம் வசமாக சிக்கிக் கொண்ட சுவாரஸ்ய சம்பவம் நிகழ்ந்து உள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 18, 2023, 12:11 PM IST

கஜபதி: தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் மீதான தாக்குதல் வதந்தியை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கடன் தொல்லையில் இருந்த தப்ப சினிமாவை மிஞ்சும் வகையில் கொலை நாடகம் நடத்திய இளைஞரை ஒடிசா போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். ஒடிசா மாநிலம் கஜபதி மாவட்டம் பரியபடா கிராமத்தை சேர்ந்தவர் சரத் பரிச்சா.

திருமணமாகி மனைவி மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். சரத், ஊரைச் சுற்றி பலரிடம் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி கணவன் மனைவி இடையே சண்டை சச்சரவு ஏற்பட்டு உள்ளது. கடன் தொல்லை மற்றும் மனைவியிடம் இருந்து தப்ப நினைத்த சரத் அதற்கு சினிமா பாணியில் திட்டமிட்டு உள்ளார்.

வெளியூர் வேலைக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறிய சரத், தமிழகத்தில் பணிபுரிவதாக குடும்பத்தினருடன் தெரிவித்து உள்ளார். இந்நிலையில், தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரவிய நிலையில் திட்டமிட்டு அதை பயன்படுத்திக் கொண்ட சரத், கடந்த மார்ச் 6 ஆம் தேதி தன்னை தமிழகத்தில் இருப்பவர்கள் தாக்கியதாக கூறி காயங்களுடன் இருப்பது போன்று குடும்பத்தினருடன் வீடியோ கால் பேசியுள்ளார்.

இந்நிலையில், அந்த சம்பவம் முடிந்த சில நாட்களில் சரத் சடலமாக கிடக்கும் புகைப்படங்கள், அவரது குடும்பத்திருக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சரத் குடும்பத்தினர் அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த ஒடிசா போலீசார், சரத் மரணம் குறித்து தமிழக போலீசாரிடம் தகவல் கேட்டு உள்ளனர்.

தமிழகத்தில் சரத் கொலை செய்யப்படவில்லை என்பதை தமிழக போலீசார் உறுதி செய்ததை அடுத்து, சந்தேகமடைந்த ஒடிசா போலீசார் கிடுக்குபிடி விசாரணை நடத்தியதில் பல்வேறு உண்மைகள் வெளிவந்தன. வீட்டை விட்டு வெளியேற சரத், தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பரவிய வதந்தியை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு கொலை நாடகம் நடத்தி உள்ளார்.

மேலும் நண்பர்கள் உதவியுடன் தான் சடலமாக இருப்பதை புகைப்படம் எடுத்த சரத் அதை, தனது செல்போன் மூலமாகவே குடும்பத்தினருக்கு அனுப்பி உள்ளார். இதில் சந்தேகமடைந்த போலீசார், அவரது செல்போன் எண்ணை டிராக் செய்து பார்த்ததில் அது மும்பையில் இருப்பதாக காண்பித்து உள்ளது.

இதையடுத்து, மும்பை விரைந்த ஒடிசா தனிப்படை போலீசார் அங்கு உள்ள மீன் கடையில் வேலை பார்த்துக் கொண்டு இருந்த சரத்தை கையும் களவுமாக பிடித்து குண்டுக்கட்டாக ஒடிசா தூக்கி வந்தனர். இது தொடர்பாக ஒடிசா போலீசார், சரத்திடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:பீகாரில் கர்ப்பிணிச் சிறுமி எரித்துக் கொலை! - கோர சம்பவத்தின் கொடூர பின்னணி!

ABOUT THE AUTHOR

...view details