ஜால்னா: மஹாராஷ்டிரா மாநிலம், போகார்டன் தாலுகாவில் திருமணமான மனைவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட ஆடியோவை கேட்ட கணவன் தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்தப்புகாரின்படி, கஜானன் அசோக் தேஷ்முக், கஜானன் திலீப் ஷிராசாத் மற்றும் இரண்டு பெண்கள் ஆகியோர், பெண்ணிற்கு மயக்க மருந்து கொடுத்து, பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் அதனை மொபைல் போனில் படம் பிடித்தது மட்டுமின்றி, அதனை ஆடியோவாக ரெக்கார்ட் செய்தும் உள்ளனர்
இவை அனைத்திற்கும் பிறகு, அந்த ஆடியோவை பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவருக்கு அனுப்பியுள்ளனர். இந்த ஆடியோவை கேட்ட பெண்ணின் கணவர், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல இதன் அடிப்படையில், கஜானன் அசோக் தேஷ்முக், ரவி தத்தாத்ரே சப்கல், கஜனன் திலீப் ஷிராசாத் மற்றும் இரண்டு பெண்கள் மீது தற்கொலைக்கு தூண்டுதல், பலாத்காரம் போன்ற பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க:மீனவர் மீது கும்பல் தாக்குதல்: மனைவி கண்ணீர் மல்க கோரிக்கை