மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே உள்ள முலுண்ட் பகுதியில் மதுபோதையிலிருந்த 41 வயது நபர் ஒருவர் தனது மனைவியை இயற்கைக்கு மாறான முறையில் பாலியல் வன்புணர்வு செய்ததோடு, குழந்தைகள் முன்னிலையில் மனைவியின் பிறப்பிருப்பில் பிளாஸ்டிக் பொருளை வைத்து அடைத்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
இதுகுறித்து எம்.டி என்ற தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் அளித்த தகவலின் படி முலுண்ட் காவல் நிலைய போலீசார், 35 வயது பெண்ணிடம் விசாரணை நடத்தினர். பின்னர் காவல் துறையினர் அளித்த தகவலின் படி "அந்த நபர் அடிக்கடி குடித்துவிட்டு வந்து கொடூரமான முறையில் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
சம்பவம் நடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, மதுபோதையிலிருந்த நபர் பெண்ணின் ஆடைகளை கிழித்ததாகவும், பின்னர் அந்தரங்க உறுப்பில் பிளாஸ்டிக் போன்ற பொருளை வைத்து அடைத்ததாகவும் அந்த பெண் வேதனையுடன் கூறினர்" போலீசார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் கூறியதாவது: "பெண்ணின் அந்தரங்கப் பகுதியிலிருந்து பிளாஸ்டிக் பைப் அகற்றப்பட்டுள்ளது. சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்றனர். இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக, குற்றம்சாட்டப்பட்ட நபர் மீது பிரிவுகள் 326, 354 பி, 354, 376, 377 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இதையும் படிங்க:கால்வாயில் விழுந்த கார்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு