உஸ்மானாபாத்: மகாராஷ்டிராவில் 3 வயது சிறுமியை பாலியல் பாலியல் வன்புணர்வு செய்த 13 வயது சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. உஸ்மானாபாத் மாவட்டத்தில் தனது வீட்டிற்கு விளையாட வந்த 3 வயது சிறுமியை 13 வயது சிறுவன் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி சம்பவத்தை குடும்பத்தினரிடம் கூறியதையடுத்து, சிறுமியின் பெற்றோர் ஆனந்தநகர் காவல் நிலையத்தில் இன்று (டிசம்பர் 10) புகார் அளித்தனர்.
3 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த 13 வயது சிறுவன் - போக்சோ வழக்கு
மகாராஷ்டிராவில் 3 வயது சிறுமியை 13 வயது சிறுவன் பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 13 வயது சிறுவன்
அந்த புகாரின் பேரில் ஆனந்தநகர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் சிறுவன் மீது வழக்குப் பதிவு செய்து, சிறுவனிடம் விசாரணை நடத்திவருகின்றனர். இதனிடையே பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க:5 வயது சிறுமிக்கு லிப்டில் பாலியல் வன்கொடுமை : ஏசி மெக்கானிக் கைது