'மெட்ரோ மேன்' என்று பிரபலமாக அழைக்கப்படும் இ ஸ்ரீதரன், பாஜகவில் இணையத் தயாராக உள்ளதாக அக்கட்சியின் கேரள மாநிலத் தலைவர் இ சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு, கேரளாவில் நடைபெறவுள்ள விஜய யாத்ரா என்ற ரத யாத்திரையின்போது ஸ்ரீதரன் முறையாக கட்சியில் இணைவார். பிப்ரவரி 21ஆம் தேதியன்று, காசர்கோட்டில் தொடங்கும் ரத யாத்திரை, மார்ச் முதல் வாரத்தில் திருவனந்தபுரத்தில் நிறைவடையும்" என்றார்.
இந்த யாத்திரைப் பயணத்தை உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தொடங்கிவைக்கிறார். மேலும், பல அமைச்சர்கள் ரத யாத்திரைக்குத் தலைமை தாங்குவார்கள் எனக் கூறப்படுகிறது.