தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'புதிய வேளாண் திருத்தச்சட்டங்கள் உடனடியாக திரும்பப் பெறவேண்டும்' -மெகபூபா முப்தி! - மெகபூபா முப்தி

ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Mehbooba demands immediate withdrawal of farm laws
புதிய வேளாண் திருத்தச்சட்டங்கள் திரும்பப் பெற வலியுறுத்தும் மெகபூபா முப்தி

By

Published : Jan 28, 2021, 7:16 PM IST

ஸ்ரீநகர்: விவசாயிகளுடன் கலந்தாலோசிக்காமல் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும் என ஜம்மு-காஷ்மீர் மக்களின் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா முப்தி வலியுறுத்தியுள்ளார்.

குடியரசு தினத்தன்று நடைபெற்ற டிராக்டர் பேரணியில் நடைபெற்ற வன்முறை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர், இந்தப் பதிலைத் தந்துள்ளார்.

மேலும், "வன்முறையில் ஈடுபட்டவர்கள் பாஜகவிலுள்ளவர்கள்தான். விவசாயிகள் அச்சத்தில் இருக்கிறார்கள். எனவே, உடனடியாக இச்சட்டங்கள் திரும்பப் பெறவேண்டும். குடியரசு தினத்தன்று ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தில் சதி இருப்பதாக நான் உணர்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:கங்குலியை மருத்துவமனைக்கு சென்று சந்தித்த மம்தா பானர்ஜி

ABOUT THE AUTHOR

...view details